இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் விரைவில் மாற்றம் வரவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகிய இருவரில் ஒருவர் தலைமைப்பதவிக்கு தெரிவாகலாம் எனவும் உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவருக்கு தலைவர் பதவியையும், மற்றையவருக்கு செயலாளர் பதவியையும் வழங்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்துக்கு வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக செயற்படும் இரா. சம்பந்தனே தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார். எனினும், தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியை அவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்தார். அவரே தற்போது தமிழரசுக்கட்சியின் தலைவராக செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.










