ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட கெஸ்கீபன் பிரிவில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஜவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பரிக்கும் போது கடுமையான குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று இன்று வைத்திய சாலையில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இச் சம்பவம் இடம்பெற்று 4 தினங்கள் முடிவுற்ற போதும் தோட்ட நிர்வாகம் எந்த விதமான உதவிகளையும் செய்ய வில்லை என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மிக வேதனையுடன் கூறுகின்றனர்.
பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஞாயிறு விடுமுறை தினங்களில் பணி செய்து பணம் உழைக்கும் இந்த தொழிலாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகம் முன் வந்து உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
