ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளாட்சிமன்றங்களின் முன்னாள் தலைவர்களுக்கும் அக்கட்சியின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையில் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மாவட்ட மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மேயர்கள், பிரதி மேயர்கள் மற்றும் தலைவர்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற ரீதியில் எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.










