” வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை அகற்றகூடாது” – பொன்சேகா

” வடக்கு, கிழக்கில் இருந்து படைகளை முழுமையாக அகற்றகூடாது. அதேபோல வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை முடக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படக்கூடாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இராணுவ கட்டமைப்பு மறுசீரமைப்பு என்ற போர்வையில் இராணுவத்தின் பலத்தை குறைப்பதற்கு இந்த அரசு முற்படுவதுபோல் தெரிகின்றது. போர் காலத்தில் வடக்கு, கிழக்கில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்ட இடங்கள் உள்ளன. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிய மீளாய்வின் பிறகு கையளிக்கலாம். எனினும், அப்பகுதியில் இராணுவம் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனாலும் வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை முடக்குவதற்கான முனைப்புகள் காட்டப்படுவதாக தெரிகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நான் முழுமையான எதிர்ப்பு.” – என்றார்.

Related Articles

Latest Articles