அரச பங்காளிகளுடன் மாதாந்தம் சந்திப்பு நடத்த ஜனாதிபதி இணக்கம்

ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை முறையாக நிர்வகிப்பதற்கும் தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்புகளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.

ஶ்ரீலங்கா ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலின்போதே இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பஸில் ராஜபக்ச கூறினார் என்று சாகர காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்புக்கு அழைப்பதாக இருந்தால் அது தொடர்பில் மொட்டு கட்சிக்கு அறிவிக்கப்பட வேண்டும் என மொட்டு கட்சியால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியால் ஏற்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசுக்குள் பிரச்சினைகளை ஏற்பட்டால் அப்பிரச்சினைகள பேச்சுமூலம் தீர்ப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, அரச பங்காளிக்கட்சி தலைவர்களுடன் மாதம் ஒரு முறை சந்திப்பை நடத்துவதற்கும் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles