வெள்ளிக்கிழமை (16) காலை பம்பலப்பிட்டியில் கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று ஜயா வீதி சந்திக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கண்டி ஹந்தான பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்