வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.










