அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை அதிகரிக்க தீர்மானம்?

அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை 40 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விநியோகஸ்தர்களின் தரகு பணத்தினை அதிகரிப்பதற்கு இணக்கம் வௌியிடப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதனையடுத்து, தரகு பணத்தினை அதிகரிக்காவிட்டால், எதிா்வரும் ஜூலை 7ம் திகதி முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகவுள்ளதாக அந்த சங்கத்தின் பொது செயலாளர் பி. எஸ். எஸ். மாரசிங்க கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles