இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
கோதுமை மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பனிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையும் குறைக்கப்படவுள்ளது.