ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இல்லாமல் எந்தவொரு கூட்டணியாலும் தேர்தலில் வெற்றிபெறமுடியாது – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார். தேவையேற்படின் கட்சிகள் எம்முடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம்.” எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவையே களமிறக்க வேண்டும் என மொட்டு கட்சிக்குள் ஒரு தரப்பினர் வலியுறுத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
