ரஷ்யாவில் தணிகிறது பதற்றம் – வாக்னர் படை தலைவர் எடுத்துள்ள முடிவு

வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. ரஷியப் படைகளுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான சண்டையிட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வாக்னர் அமைப்பு தற்போது ரஷியாவுக்கு எதிராக திரும்பியது.

வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக அறிவித்தது. அதோடு 50 சதவீதம் ராணுவ வீரர்கள் தங்களுடன் ஆதரவாக இருப்பதாகவும், மாஸ்கோவை நோக்கி முன்னேறுவதாகவும் தெரிவித்தது. ஏற்கனவே உக்ரைன்கு எதிராக போரிட்டு வரும் நிலையில், உள்நாட்டில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களிடையே உரையற்றினார்.

அப்போது வாக்னர் அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும், கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டார். மேலும், வாக்னர் படை தலைவர் துரோகம் செய்துவிட்டார். முதுகில் குத்திவிட்டதாக தெரிவித்தார். ரஷியா முழுவதும் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது.

பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் வாக்னர் குழு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெறத் தொடங்க முடிவு செய்தது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பதட்டத்தைத் தணிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழு தலைவர் அண்டை நாடான பெலாரசுக்குச் செல்கிறார். அவர் மீதான கிரிமினல் வழக்கு முடித்து வைக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரஷியாவில் ஏற்பட இருந்த ஆயுத கிளர்ச்சி முடிவுக்க வர இருக்கிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles