நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்களாவத்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்த முதியவர் ஒருவர், தோட்டத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த முதியவர் 70 வயதுடைய நானுஓயா எடின்புரோ பிரதேசத்தைச் சேர்ந்த வேலுசாமி காளியம்மா என தெரியவந்துள்ளது.
குறித்த முதியவர் நேற்று விவசாய தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது மழையுடனான காலநிலை காரணமாக தோட்டத்தில் ஓரத்தில் இருந்து வழுக்கி நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டதன் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










