” உலகக்கிண்ணத்தை வெல்வதற்கு இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.” – என்று உலக சாதனை பந்து வீச்சாளரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
” இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடப்பது ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும். 1987-ம் ஆண்டு தவிர ஆசியாவில் நடந்த அனைத்து உலககோப்பை தொடரிலும் இறுதிசுற்றுக்கு ஆசிய அணிகள் தான் வந்துள்ளன.
இந்த முறை இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதலாம். உள்ளூர் சூழலில் ஆடுவதால் உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். உலக கோப்பையை பொறுத்தவரை திறமையை விட வீரர்களின் மனநிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. வீரர்கள் நேர்மறையான எண்ணத்துடன் விளையாட வேண்டும்’ எனவும் முரளி கூறினார்.










