நோயாளிகளை வைத்தியசாலையில் இறக்கிவிட்டுவந்த அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவரின் நிலைமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தியத்தலாவை வைத்தியசாலையில் இருந்து பதுளை வைத்தியசாலைக்கு இன்று நோயாளர்களை ஏற்றி வந்த அம்பியூலன்ஸ் வண்டி , நோயாளர்களை வைத்தியசாலையில் இறக்கிவிட்டு மீண்டும் தியத்தலாவை நோக்கி பயணிக்கையில், பதுளை – பண்டாரவளை வீதி தோவ திக்கராவ பிரதேசத்தில் லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி படுகாயமடைந்தார். அவர் தற்போது தியத்தலாவை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா