ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் சஜித்!

அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நிராகரித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால், அதன்பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் இணைந்து செயற்பட தயாரில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஊழல்வாதிகள் உள்ள தற்போதைய அரசை பாதுகாப்பதற்கு தமது அணி தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Articles

Latest Articles