உக்ரைன் ‘நோட்டோ’ கூட்டணியில் இணைவதற்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது.
இராணுவ உதவி கோருவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்றுள்ளார். துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு அதிபர் எர்டோகன் வரவேற்றார். அப்போது உக்ரைன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, சுவீடன் நேட்டோ படையில் இணைய விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் துருக்கி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடன் நிரந்தர உறுப்பினர் ஆக முடியவில்லை. துருக்கி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் குர்திஷ் மற்றும் இதர குரூப் விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்காததால் சுவீடனுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் பின்லாந்து நேட்டோவில் இணைய ஆதரவு அளித்துள்ளது.
