ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழுக் கூட்டத்திலிருந்து, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் முஷாரப் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முஷாரப் எம்.பியும் கலந்துகொண்டார்.
எனினும், ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இருந்த இரட்டைக்குடியுரிமை சரத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஷாரப்பை வெளியேற்ற வேண்டும் என மரிக்கார் வலியுறுத்தினார். இதற்கு ஏனைய எம்.பிக்களும் ஆதரவு வழங்கினர்.
இதனையடுத்தே ரிஷாட் கட்சி உறுப்பினர் வெளியேற்றப்பட்டார்.
