மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த வருடத்தில் 2,033 மில்லியன் ரூபா செயற்பாட்டு செலவினமாக அமைந்துள்ளது. இது, கிடைத்துள்ள வருமானத்தைவிட 23 மடங்கு அதிகமென்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த அலுவலகம் புதிதாக வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை மூலமே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் 22, 214 மில்லியன் ரூபாவை நட்டமீட்டியது. அதில், வெளிநாட்டு அந்நியசெலாவணி முக்கியமாக அமைந்துள்ளது என்பதையும் அந்தக் கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான ஆறு வருட காலத்தில், மத்தள சர்வதேச விமான நிலையம் 42,818 மில்லியன் ரூபாவை நட்டமீட்டியுள்ளதாகவும் அந்த கணக்காய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தகவல்கள் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்த கணக்காய்வு குறிப்பிடுகிறது.
