மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர். இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில் தனியார் பஸ் வண்டி மன்னம்பிட்ட கொட்டடி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 10 பேர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் என தெரியவந்துள்ளது.
