சுவீடன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கு தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்த துருக்கி தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது.
குர்திஷ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால், துருக்கி தடையை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் நேற்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன், சுவீடன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், துருக்கி நாடாளுமன்றத்தில் ஆதரவு பெற வேண்டும். அதற்கான அழுத்தத்தை கொடுப்பதாக எர்டோகன் உறுதி அளித்துள்ளார்.
துருக்கி ஜனாதிபதி எர்டோகன், சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன், நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவை துருக்கி எடுத்துள்ளது. துருக்கியின் இந்த முடிவை வரலாற்று நாள் என ஜோன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும், ”சுவீடன் இணைவது, நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனளிக்கும். இது பாதுகாப்பு மற்றும் வலிமையை ஏற்படுத்தும்” என்றார். சுவீடன் 32-வது நாடாக நேட்டோவில் இணைகிறது.
