ஹாலிஎலவில் களவாடியவர் குருவிட்ட பகுதியில் கைது!

ஹாலிஎல, சின்ன அலுகொல்ல 100 ஏக்கர் பிரதேசத்தில் வீடொன்றினுள் நுழைந்து சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (10) குருவிட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சின்ன அலுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அதனை ஆராய்ந்த பொலிஸார், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களை சோதனையிட்ட போது, ​​சந்தேகநபர் கோடரியுடன் வந்து வீட்டின் ஜன்னலை கோடரியால் அடித்து உடைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்த ஹலிலெல பொலிஸார், இந்த சந்தேக நபர் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது

அந்தத் தகவலின் அடிப்படையில் குருவிட்ட பொலிஸ் நிலையப் பொலிஸார் சந்தேகநபரை நேற்று 10ஆம் திகதி கைது செய்து ஹலிலெல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த திருட்டுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் நபர் ஒருவரை ஹலிலெல பொலிஸார் ஏற்கெனவே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

பிரதான சந்தேக நபரான குறித்த நபரை பதுளை நீதமான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles