ஒன்றரைக் கோடி ரூபாவை முதல் கட்ட இழப்பீடாகச் செலுத்திய மைத்திரி – கால அவகாசமும் கோரல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவை முதல் கட்ட இழப்பீடாகச் செலுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. குறித்த உத்தரவுக்கு அமைய, அவர் முதல் கட்டமாக ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவைச் செலுத்தியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97 ஆயிரத்து 500 ரூபா ஓய்வூதியம் பெறுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54 ஆயிரத்து 285 ரூபாவை மாதாந்தம் பெறுவதாகவும் அந்தப் பிரேரணையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 10 கோடி ரூபா இழப்பீட்டுத் தொகையில், ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியத்துக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எஞ்சியுள்ள தொகையை 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 10 தவணைகளில் வருடாந்தம் 85 இலட்சம் ரூபா வீதம் செலுத்த அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles