குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி பலி! தொடர்கிறது பேரவலம்!

நமது நிருபர்கள் – நீலமேகம் பிரசாந்த, ராசையா கவிஷான்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை நடுக்கணக்கு தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (17) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஐந்து பிள்ளைகளின் தாயான 80 வயதான காளிமுத்து மாரியாய் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தோட்ட தொழிலில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்தாலும், வறுமை காரணமாக கைக்காசுக்கு வேலை செய்துவந்துள்ளார்.

பெருந்தோட்டங்களில் தேயிலை செடிகள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக செடிகளுக்கு அடியில் குளவிகள் கூடு கட்டி வாழுகின்றது எனவும், கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை இவைகள் தாக்குவதால் தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் இவ்வாறான மரணங்கள் நிகழ்வதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles