கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்!

கம்பஹா மாவட்டத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நாளை (26) நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் மக்களுக்கு, தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles