ஓய்வு பெறுகிறார் தர்ஜினி சிவலிங்கம்

இலங்கையின் நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தாம் இலங்கையின் வலைப்பந்தாட்ட துறையில் பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு தற்பொழுது 45 வயதாகின்றது எனவும், ஆசியாவில் வேறு எந்த ஒரு பெண் வீராங்கனையும் இவ்வளவு வயது வரை விளையாடியது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வலைபந்தாட்ட போட்டித்தொடருன் ஓய்வு பெறுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டாலும், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் கழகமட்ட போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles