கண்டி பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு உத்தியோகபூர்வ சிறைச்சாலையாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) 2 ஆம் பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பழைய போகம்பரை வளாகத்தில் சிறைச்சாலை ஒன்றினை நிறுவுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வளாகம் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சட்டப்பூர்வமாக ஒரு சிறைச்சாலையாகச் செயல்படும்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் மூலம் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
