நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் உள்ளடங்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோகப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி இந்து நாளிதழ் மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது.
73 வயதான உன்னிகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரஜையின் மரணம் குறித்து கொழும்பிலுள்ள இந்திய தூதுரகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஏனைய இந்தியக் கைதிகள் அனைவரும் பாதுகாப்பு கருதி பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
