‘பொலிஸ் அதிகாரம்’ குறித்து கூட்டமைப்பு எம்.பிக்களுடன் அமைச்சர் டிரான் அலஸ் பேச்சு

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பொலிஸ் அதிகாரங்களைக் கோருவதற்கான காரணங்களைக் கூட்டமைப்பினரிடம் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.

உலக நாடுகளை முன்னுதாரணம்காட்டி அதிகாரப் பகிர்வின் அவசியத்தை தமிழ் கூட்டமைப்பினர் விளக்கியதுடன், தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள், அங்கு பயன்படுத்தப்படும் முறைகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்தனர். இங்கிலாந்து மற்றும் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை என அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டினார்.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பொது பாதுகாப்பு அமைச்சர் கேட்டறிந்தார்.

மாவட்டக் குழுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட தூரம் சென்று கொழும்பு வர வேண்டியிருப்பதாலும், சிலரது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான உத்தேச விடயங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும், ஆனால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுவையும் நியமிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தமிழ் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வட மாகாணம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், பல சிறு குழந்தைகள் போதைப்பொருளுக்கு அதிகளவில் அடிமையாகி இருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இதன்போது தெரிவித்தனர்.

போதைப் பொருள் மற்றும் பாதாள உலக அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவிற்கு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கிடைக்கும் தகவல்களை எந்த நேரத்திலும் வழங்க முடியும் என்றும், அவ்வாறான தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் உரிய விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான தகவல்களை பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் எந்த நேரத்திலும் கலந்துரையாட முடியும் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் மா அதிபர், சி.டி.சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்காயன் இராசமாணிக்கம், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடேக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு வாரங்களுக்குள் இதுகுறித்து அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்த இரு தரப்பினரும் இணக்கம் கண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles