பசறை டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பதுளை, பசறை டெமேரியா A தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் நேற்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்கின்றது.

டெமேரியா A தோட்டத்தில் இயங்கி வந்த தோட்ட காரியாலயத்தை , டெமேரியா B தோட்டத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இது சம்பந்தமாக அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், உடன் இதற்கான உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

டெமேரியா A தோட்டத்தில் இயங்கி வந்த தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்டத்திற்கு மாற்றினால் தாங்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள பல மைல் தூரம் செல்ல வேண்டி வரும் எனவும் இதனால் தாங்கள் பல அசௌசரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles