பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து உழவு இயந்திரம் விபத்து – சாரதி படுகாயம்

பதுளை, வெவஸ்ஸ தோட்டத்துக்குரிய உழவு இயந்திரமொன்று இன்று பிற்பகல் வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

வெவஸ்ஸ தோட்டத்தைச் சேர்ந்த 47 வயதான சாரதியொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

தோட்ட அலுவலகத்திலிருந்து, வெவஸ்ஸ தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த குறித்த உழவு இயந்திரம், பதுளை – பசறை வீதி 7ஆம் கட்டை பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை பதுளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles