ஒரு வருட காலப்பகுதிக்குள் ஊடகர் விக்கியிடம் இரு தடவைகள் கொள்ளை

கொழும்பில் உள்ள தனது அலுவலகத்திற்குள் நுழைந்து கமரா மற்றும் ஊடக உபகரணங்களை இனந்தெரியாத ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்னரும் இதேபோன்று திருட்டு இடம்பெற்றபோதிலும் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓகஸ்ட் 14 ஆம் திகதி இரவு, கொட்டாஞ்சேனை, பிக்கரிங்ஸ் வீதியில் உள்ள தனது aivarree.com என்ற இணையதளத்தை நடத்தும் அலுவலகத்திற்குள் ஒருவர் நுழைந்து இந்தத் திருட்டைச் செய்ததாகவும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சுயாதீன ஊடகவியலாளர் பரமேஸ்வரன் விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தனது இணையதளம் மற்றும் யூடியூப் தளங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தனது ஊடகப் பணியை இலக்கு வைத்து யாரோ இந்தத் திருட்டைத் திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்.

ஜூன் 21, 2022 அன்று, யாரோ ஒருவர் ஊடகப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் அப்பிள் ரக மடிக்கணனி உட்பட 20 இலட்சம் பெறுமதியான உபகரணங்களை கொட்டாஞ்சேனையில் உள்ள தான் வசிக்கும் வீட்டில் இருந்து திருடி சென்றதாக, கொட்டாஞ்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை எவரையும் கைது செய்ய பொலிஸாரால் முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தனது இணையதளம் இரண்டு தடவைகள் “ஹெக்“ செய்யப்பட்டதாகக் கூறும் சுயாதீன ஊடகவியலாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன், தான் நடத்தும் இரண்டு யூடியூப் தளங்களும் ஹெக் செய்யப்பட்டதாகவும் ஒரு யூடியூப் தளம் முழுமையாக அழிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles