தியத்தலாவையின் அரச மருந்தகமொன்றின் ஊழியரொருவருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதினால், அம் மருந்தகம் காலவரையறையின்றி இன்று 26-10-2020ல் மூடப்பட்டுள்ளது.
அத்துடன்,அம் மருந்தகத்தில் கடமையாற்றிய அனைவரையும் பி.சி.ஆர். பரிசீலனைக்குற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, அப்பகுதிசுகாதாரப் பரிசோதகர் எஸ். சுதர்சன் தெரிவித்தார்.
தியத்தலாவை நகரில் அமைந்திருக்கும் அரச மருந்தகத்தின் ஊழியரொருவர் நோய்வாய்ப்பட்டதினால், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசீலனையில் அவருக்கு இன்று கொரோனா தொற்றுஏற்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இம்மருந்தகத்திற்கு குறிப்பிடப்படும் தினங்களில் மருந்துவகைகளை பெற்றுக்கொள்ளவந்தவர்களையும் இனம் காணும் செயற்பாடுகளும் தற்போதுமேற்கொள்ளப்பட்டுவருவதாக,சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுதர்சன் மேலும் கூறினார்.
எம்.செல்வராஜா, பதுளை