” அடுத்த பொதுத்தேர்தலிலும் கண்டி மாவட்ட மக்கள் தமது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வார்கள்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
” 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டிலேயே கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டது. 2020 பொதுத்தேர்தலிலும் அதனை மக்கள் தக்கவைத்துக்கொண்டனர். அடுத்த பொதுத்தேர்தலிலும் தமது பிரதிநிதித்துவத்தை மக்கள் தக்க வைத்துக்கொள்வார்கள்.” எனவும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.
சூரியன் வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே வேலுகுமார் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், லயன் யுகத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும் எனவும், கூலித்தொழில் முறைமை ஒழிக்கப்பட்டு பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
