சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து புதியதொரு கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை ஈடுபட்டுவருகின்றது.
இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவரும் நிலையில், ஆரம்பக்கட்ட நகர்வுகள் வெற்றியளித்துள்ளன என்று அறியமுடிகின்றது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே கூட்டணிக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. விமல்வீரவன்ச தலைமையிலான சுதந்திர மக்கள் சபையையும் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் பங்காளிக்கட்சிகளாக உள்ளன.
