மாத்தளை, ரத்தவத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.
” மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாரிடம் பேச்சு நடத்தினேன். தற்போது தோட்ட நிர்வாகம் சமரசத்துக்கு வரச்சொல்கின்றது. இதற்கு உடன்பட வேண்டாம் எனக் கூறியுள்ளேன். தோட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்பட முடியாது. வீடுகளை அடித்து நொறுக்க முடியாது. எனவே, இணக்கப்பாடு அல்ல, குறித்த தோட்ட உதவி முகாமையாளர் கைது செய்யப்பட வேண்டும்.” எனவும் அரவிந்தகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.










