2024 இல் மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் பரிசீலித்து வருகின்றது என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாதபோதிலும், மே தினத்தில் தனிவழி செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமான பின்னர், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி என்பன இணைந்தே பிரதான மே தினக் கூட்டத்தை, பேரணியை நடத்திவந்தன.
இந்நிலையிலேயே இம்முறை தனித்து நடத்த வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுவருகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சிற்சில செயற்பாடுகள் தொடர்பில் திகா அணி அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
