லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்திலிருந்து தனது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் உயிரிழந்துள்ளார்.
லோகி தோட்டத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அவரின் சடலம் மிதந்துக்கொண்டு இருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
தனது ஒன்றரை வயது குழந்தையுடன் குறித்த தாய் நேற்று முதல் காணாமல்போயிருந்தார். இந்நிலையிலேயே இன்று காலை அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை எங்குள்ளார் என்பது பற்றியும் தேடுதல் இடம்பெற்றுவருகின்றது.
சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கௌசல்யா
