எரிபொருள் பெறுவதற்காக இதுவரை அமுலில் இருந்த QR நடைமுறை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, எரிபொருளுக்கும் வரிசை உருவான நிலையில், அதனை சீர்செய்வதற்காக QR முறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










