மலையகம் உட்பட நாட்டில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்கிறது சீன நிறுவனம்

சீன எரிபொருள் நிறுவனமான ‘சினோபெக்’ எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் நாடு பூராகவும் தமது கிளைகளை நிறுவவுள்ளது என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சினோபெக் நிறுவனம் தமது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஆரம்பித்துள்ளது. நாடு பூராகவும் 150 நிலையங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. 12 இடங்களைத்தவிர ஏனைய நிலையங்களின் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், ஆஸ்திரேலிய யுனைடட் பெற்றிலோலி நிறுவனமும் இவ்வருடத்துக்குள் தமது சேவையை நாட்டில் ஆரம்பிக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles