நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ, மஸ்கெலியா ஆகிய பகுதிகளில் கால்நடை வைத்தியர்கள் இன்மையால், அப்பிரதேசங்களில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
” கால்நடை வளர்ப்பு ஊடாகவே எமக்கு வருமானம் கிடைக்கின்றது. அந்த கால்நடைகளுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால், சிகிச்சையளிக்க வைத்தியர்கள் இல்லை. நீண்டகாலமாக இந்நிலை நீடிக்கின்றது.” – என்று கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
கன்றை ஈன்றெடுத்த பின், இதுவரை ஆறு பசுக்கள் இறந்துள்ளன.
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியரை, பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா பகுதிகளுக்கு அழைத்தாலும், கால்நடை உயிரிழந்த பின்பே அவர்கள் வரும் தாமத நிலை காணப்படுகின்றது எனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
எனவே, பொகவந்தலாவ, மஸ்கெலியா பகுதிகளில் உள்ள கால்நடை வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்குமாறு கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்










