ஹாலி-எல, அருள்மிகு ஸ்ரீ வீரசக்தி விநாயகப் பெருமான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம், 17-09-2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 22ந் திகதி வைரவர் மடை பூஜையுடன் நிறைவுபெறும்.
17-09-2023 கொடியேற்றமும், 18ந் திகதி பால்குட பவனியும், 1008 சங்காபிஷேகமும், 20ந் திகதி முத்தேர் பவனியும், 21ந் திகதி தீர்த்தோற்சவமும், கொடியிறக்கமும், பூங்காவன நிகழ்வும் 22ந் திகதி இறுதியாக வைரவர் மடையும் இடம்பெற்று, அலங்கார உற்சவம் இனிதே நிறைவுபெறும்.
இவ் உற்சவ பூஜை நிகழ்வுகளை வேதாகம ரத்னம் சிவஸ்ரீ ஆறுமுகம் ரமேஸ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் மேற்கொள்வர்.
மேற்படி வருடாந்தர அலங்கார உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய பரிபாலன சபையினரும், இந்து பரிபாலன சங்கத்தினரும், இந்து இளைஞர் மன்றத்தினரும் இணைந்து துரிதமாக மேற்கொண்டுள்ளனர்.
எம். செல்வராஜா பதுளை
