நுவரெலியாவில் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

நுவரெலியா கட்டுமான பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த ஊழியர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த கட்டிடத்தில் முதலாவது மாடியில் இருந்து ஊழியர் தவறி கீழே விழுந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் (23) சனிக்கிழமை இரவு நடந்துள்ளதாகவும்

சம்பவத்தில் உயிரிழந்தவர் மஹவலவத்த கீழ் பிரிவு இரத்தினபுரியை வசிப்பிடமாக கொண்ட 59 வயதான சுப்பிரமணியம் வடிவேலு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் சனிக்கிழமை இரவு அதிக மதுபோதையில் இருந்ததாகவும் இரவு முழுவதும் தங்கியிருந்த இடத்தில் இவரை காணவில்லை எனவும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தேடிப்பார்த்த போது நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் வெளியே இறந்த நிலையில் கிடந்ததாக சக தொழிலாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சடலம் தொடர்பான மரண விசாரணைகளின் பின்னர் சடலம் நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை இடம்பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்ட இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

செ.திவாகரன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles