பதுளை மாவட்டத்தில் இதுவரை 11 பேருக்கு கொரோனா – 800 பேர் சுயதனிமையில்!

பதுளை மாவட்டத்தில் இதுவரையிலான (30-10-2020) காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் மொத்தமாக கண்டுப்பிடிக்கப்பட்டு, கொழும்பு மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள கொரோனா மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் அனைவருமே பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்றாளர்களென்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டவர்களாவர்.

மேலும், 800 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பி.சி.ஆர். பரிசோதனைக்குற்பட்டுள்ளனர். இத்தகையவர்களில் பலர் கொரோனா தொற்றாளர்களாக இருக்கக்கூடுமென்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, பண்டாரவளை அரசினர் மருத்துவமனை வளாகத்தில் தனிப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென நூறுகட்டில்கள் போடப்பட்டுள்ளன. ஒரே தடவையில் நூறு தொற்றாளர்கள் சிகிச்சை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை, வெலிமடை, ஊவா – பரணகமை, பசறை, ஹாலி-எலை, லுணுகலை ஆகிய இடங்களிலிருந்தே, மேற்படி 11 கொரோனா தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

மற்றும், இம்மாவட்டத்தின் ரொசட் பெருந்தோட்டப்பிரிவு, மேமலை பெருந்தோட்டப் பிரிவு ஆகிய இரு தோட்டங்களில் வெளியார் எவரும் பிரவேசிக்காமலும்,வெளியார் எவரும் அத்தோட்டங்களுக்குள் நுழையாதவகையிலும் சுகாதாரப் பிரிவினராலும்,அவ்வப் பகுதிபொலிசாரினாலும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

பசறைநகரில் இரு வர்த்தகநிலையங்களும், ஹாலி-எலைநகரின் மதுபானம் விற்பனைநிலையமொன்றும்,வெலிமடை–சாப்புக்கடை,தியத்தலாவைஆகிய இடங்களின் மீன் விற்பனைநிலையங்களும் கொரோனாதொற்றளர்கள் சென்ற இடங்களாகக் கண்டுப்பிடிக்கப்பட்டு,அவைகள் மூடப்பட்டுள்ளன. இவ் வர்த்தகநிலையங்கள் வாயில்களிலும்,தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளிலும் தடைசெய்யப்பட்ட இடங்களாக அறிவித்தல்களும் ஒட்டப்பட்டுள்ளன.

மினுவாங்கொடை,பேலியகொடைமீன் சந்தைமற்றும் அவ் வளாகத்தில் பல்வேறுதொழில் துறைகளில் ஈடுபட்டிருந்து,பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனாதொற்றாளர்களாகவே,மேற்படி 11 பேரும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டவர்களாவர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles