பல பகுதிகளில் மழை – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் கடும் மழை பெய்துவருகின்றது.

Related Articles

Latest Articles