ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் வருமா என அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இன்று கேள்வி எழுப்பட்ட நிலையில், அதற்கு அவர் நேரடி பதிலை வழங்கவில்லை.
” மொட்டு கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் வரவுள்ளது என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளனவே…..” என எழுப்பட்ட கேள்விக்கு,
” அப்படி எதுவும் எனக்கு அறியக்கிடைக்கவில்லை. மாற்றம் தேவை இல்லை. ஆனால் எந்நாளும் மாற்றம் இல்லாமல் இருக்கவும் முடியாது.” – என மஹிந்த பதிலளித்துள்ளார்.