நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமயில் கூடியது.
இதன்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் மேற்படி சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இச்சட்டமூலத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டது.










