நிலைகுலையும் காசா முனை – 4ஆவது நாளாகவும் போர் நீடிப்பு

ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியில் காசா முனை நிலைகுலைந்தது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.

அதேவேளை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட அமைப்புகள் கடந்த 7 ஆம் திகதி காலை திடீர் தாக்குதல் நடத்தின.காசா முனையில் இருந்து முதல் 20 நிமிடங்களில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டினரும் உள்ளடங்குகின்றனர். ஹமாஸ் அமைப்பினரின் இந்த கொடூர தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்துவருகின்றது.

மேலும், ஹமாஸ் ஆக்கிரமித்திருந்த காசா எல்லைப்பகுதிகளை இஸ்ரேல் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.இதனை தொடர்ந்து காசா முனை மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் தொடங்கியது.போர் விமானங்கள் மூலம் காசா முனையில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மேற்குகரையில் இருந்தும் இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் தாக்கபாலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது.
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசாமுனையில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளது.போர் தொடர்ந்து நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles