லொயினோன் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை ஒன்று பொகவந்தலாவ லொயினோன் தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இடம் பெற்றது.
லொயினோன் தோட்ட முகாமையாளர் கெலுமுடன் இடம் பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவ தொழிலுறவு அதிகாரி ஆறுமுகம், இணைப்பாளர் தம்பிராஜ், அமைப்பாளர் லோகநாதன் உட்பட தோட்டத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மூடப்பட்டிருக்கும் லொயினோன் தேயிலைத் தொழிற்சாலையை விரைவில் திறப்பதற்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக வேலை வழகுவதற்கும், கொழுந்து நிறுவையின் போது நாளொன்றுக்கு பிடிக்கப்படுகின்ற கழிவு கொழுந்தின் அளவை 12 கிலோவிலிருந்து ஆறு கிலோவாக குறைப்பதற்கும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு காணப்பட்டது.

