இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ள கொவிட் – 19 வைரஸ் அதிக வீரியத்துடன் தொற்றுநோயை பரப்பும் தன்மையை கொண்டுள்ளது என்பதை ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் வௌிப்படுத்தியுள்ளது.
தற்போது பரவி வரும் கொவிட் – 19 வைரஸ் ‘B.1.42‘ எனும் ரகத்தைச் சேர்ந்த மிகவும் வீரியம் கொண்ட வைரஸ் என ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே என்பவரினால் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், ஏற்கனவே இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கந்தகாடு கொத்தணி வைரஸ்கள் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 எனும் ரகங்களைச் சேர்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெரும் பரவலை ஏற்படுத்திய வைரஸ் வகையை விட இந்த வைரஸ் வகைகள் மிக வேகமாக மனிதர்களுக்கிடையில் பரவும் வல்லமையை கொண்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாகவே கொவிட் 19 இரண்டாவது அலை மிக துரிதமாக பரவி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.










