முன்னாள் பிரதி சபாநாயகரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு உரித்தானது எனக் கூறப்படும் வீட்டிலிருந்து கைக்குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தலவில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகலொன்றுக்கமைய, வெல்லவாய பகுதியில் உள்ள குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது வீட்டுக்குள்ளும், வெளியிலும் இருந்து வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகள், இரு கைக்குண்டுகள், துப்பாக்கி வேட்டு துளைக்காத அங்கி, 22 துப்பாக்கி வேட்டுகள், கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளன .

முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறித்த வீட்டில் வசிக்காதபோதிலும் ,அது அவருக்குரிய வீடு என தெரியவந்துள்ளது.

” ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறியகிடைத்தது, ஆனால் அவை அங்கு எப்படி வந்தன என்பது தொடர்பில் எனக்கு தெரியாது.” – என்று முன்னாள் எம்.பியான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டுக்கு எப்படி ஆயுதங்கள் வந்தன, குற்றச்செயலை புரியும் நோக்கி கொண்டுவரப்பட்டனவா என்பன உட்பட சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர். கைதான காவலாளியை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.  ராமு தனராஜ்

Related Articles

Latest Articles